/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
100 நாள் வேலை கேட்டு ஒன்றிய அலுவலகம் முற்றுகை
/
100 நாள் வேலை கேட்டு ஒன்றிய அலுவலகம் முற்றுகை
ADDED : செப் 27, 2024 06:40 AM

சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் 100 நாள் வேலை கேட்டு ஒன்றிய அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.
சிவபுரிபட்டி ஊராட்சிக்குட்பட்ட சிவபுரிபட்டி, மணப்பட்டி, அரசினம்பட்டி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பெண்கள் சிலர் நேற்று ஒன்றிய அலுவலகம் முன்பு கூடினர்.
ஊராட்சியில் தங்களுக்கு தொடர்ச்சியாக வேலை உறுதி திட்டத்தில் வேலை ஒதுக்கப்படவில்லை என்று குற்றம் சாட்டி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்பகுதிக்குரிய கண்மாயில் இத்திட்டத்தில் வேலை வழங்க நிர்வாக அனுமதி வந்து விட்டதாகவும், ஓரிரு நாட்களில் அனைவருக்கும் வேலை கொடுக்கப்படும் என அலுவலர்கள் உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு திரும்பினர்.