ADDED : நவ 04, 2024 07:05 AM

காரைக்குடி : அரியக்குடி அருகே உஞ்சனை முதல் தானாவயல் செல்லும் ரோடு குண்டும் குழியுமாகவும், குளம் போல் தண்ணீர் தேங்கி கிடப்பதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர்.
காரைக்குடி அருகே அரியக்குடி ஊராட்சி, உஞ்சனை -- தானாவயல் செல்லும் ரோடு உள்ளது. அரியக்குடி, வேட்டைக்காரன் பட்டி, தானாவயல், ஆறாவயல், தேவகோட்டை ரஸ்தா செல்லும் ேராட்டில் தினமும் ஏராளமான பள்ளி கல்லூரி மாணவர்கள், பள்ளி வாகனங்கள் சென்று வருகின்றன. ேராடு போடப்பட்டு பல ஆண்டுகள் ஆன நிலையில் இதுவரை புதிய ேராடு போடப்படவில்லை. அரியக்குடியிலிருந்து வேட்டைக்காரன்பட்டி வரை உள்ள 3 கி.மீ., தூரத்திற்கு ேராடு குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. பல இடங்களில் தண்ணீர் தேங்கி குளம் போல் காட்சி அளிக்கிறது. இரவில் வாகன ஓட்டிகள் பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்கும் நிலை ஏற்படுகிறது. முற்றிலும் சேதமான இந்த ரோட்டை புதுப்பிக்க வேண்டும்.