ADDED : செப் 26, 2026 04:42 AM

காரைக்குடி: காரைக்குடி அருகே அம்மா பூங்கா பராமரிப்பின்றி கிடப்பதோடு, பல லட்சம் மதிப்பிலான உடற்பயிற்சி விளையாட்டு உபகரணங்கள் வீணாகி வருகிறது.
அரியக்குடியில் தாய் திட்டத்தின் கீழ் ரூ. 30 லட்சம் செலவில் அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டது. இங்கு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை நடை பயிற்சி மற்றும் உடற்பயிற்சி மேற்கொண்டு வந்தனர். போதிய பராமரிப்பின்றி பூங்கா தற்போது பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. சிறுவர்கள் விளையாடும் விளையாட்டு உபகரணங்கள், உடற்பயிற்சி கூடத்தில், உள்ள பல லட்சம் மதிப்பிலான உடற்பயிற்சி உபகரணங்கள் பராமரிப்பின்றி வீணாகி வருகிறது. தவிர பொருட்கள் பலவும் சேதமடைந்து கிடக்கிறது. தவிர, உபகரணங்கள் திருடப்படுவதோடு இரவு நேரங்களில் சமூக விரோத செயல்களும் நடைபெறுவதாக மக்கள் புகார் கூறுகின்றனர். பூங்காவை முறையாக பராமரித்து, மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
