/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பராமரிப்பில்லாத அரசு பள்ளி மைதானம்
/
பராமரிப்பில்லாத அரசு பள்ளி மைதானம்
ADDED : டிச 07, 2024 06:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாலைக்கிராமம்: சாலைக்கிராமம் அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானம் பராமரிப்பில்லாமல் புதர் மண்டி கிடக்கிறது.
சாலைக்கிராமம் அரசு மேல்நிலைப்பள்ளியில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 700 மாணவர்கள் படித்து வருகின்றனர். கடந்தாண்டு 100 சதவீத தேர்ச்சி பெற்ற நிலையில் இப்பள்ளியில் உள்ள விளையாட்டு மைதானம் கடந்த சில வருடங்களாக பராமரிப்பின்றி புதர் மண்டி மாணவர்கள் விளையாடுவதற்கு முடியாத நிலையில் உள்ளது.
மாவட்ட நிர்வாகம் மாணவர்களின் நலன் கருதி இப்பள்ளி மைதானத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.