/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பராமரிப்பில்லாத ரயில்வே ஸ்டேஷன் ரோடு
/
பராமரிப்பில்லாத ரயில்வே ஸ்டேஷன் ரோடு
ADDED : டிச 28, 2024 08:02 AM

சிவகங்கை : சிவகங்கை டி.புதுாரில் இருந்து ரயில்வே ஸ்டேஷன் செல்லக்கூடிய ரோடு குண்டும் குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.
சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் இருந்து புதுார் வழியாக ரயில்வே ஸ்டேஷனுக்கு 2 கிலோ மீட்டர் ரோடு உள்ளது. இந்த ரோடு கலெக்டர் அலுவலகம், புதுார், எம்.ஜி.ஆர்., நகர், ரயில்வே ஸ்டேஷனை இணைக்கும் வகையில் உள்ளது. சிவகங்கையில் இருந்து சூரக்குளம், பொன்னாம்பட்டி, கருங்காலக்குடி உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்லக்கூடிய மக்கள் இந்த ரோட்டை பயன்படுத்துகின்றனர்.
பஸ் ஸ்டாண்டில் இருந்து சூரக்குளம் பொன்னாம்பட்டி ரயில்வே ஸ்டேஷன் உள்ளிட்ட பகுதிகளுக்கு மினி பஸ் இந்த வழியாகத்தான் செல்கிறது.
இந்த பகுதியில் இருந்து 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் சைக்கிளில் சிவகங்கையில் உள்ள பள்ளி, கல்லுாரிக்கு செல்கின்றனர்.
காரைக்குடியில் இருந்து ரயிலில் கலெக்டர் அலுவலகத்திற்கு வரும் அலுவலர்கள் இந்த ரோட்டை பயன்படுத்துகின்றனர்.
ரோடு முழுவதும் பல இடங்களில் குண்டும் குழியுமாக உள்ளது. மாவட்ட நிர்வாகம் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து புதுார் வழியாக ரயில்வே ஸ்டேஷன் செல்லும் இந்த ரோட்டை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

