ADDED : செப் 04, 2026 07:01 PM
கீழடி, செப்.5-
கீழடியில் தொல் பொருள் அருங்காட்சியகம் 2023லும்,திறந்தவெளி அருங்காட்சியகம் கடந்த பிப்ரவரியிலும் திறந்து வைக்கப்பட்டது. அருங்காட்சியகங்களைச் சுற்றிலும் தென்னை மரங்கள் அடர்ந்த தோப்பு, தொழிற்சாலை, செங்கல் சேம்பர் உள்ளன. தினசரி அருங்காட்சியகத்திற்கு 2ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.
இதில் டூவீலர்களில் வரும் இளம் ஜோடிகள் பலரும் தென்னந்தோப்பு, கருவேல மரங்கள் உள்ளிட்ட பகுதிகளில் தனிமைக்காக ஒதுங்குகின்றனர். கண்டிப்பவர்களை மிரட்டுவதால் போலீசிலும் புகார் செய்கின்றனர். போலீசாரும் முறையாக விசாரிப்பதில்லை.
கடந்த சில நாட்களுக்கு முன் தொழிற்சாலையில் ஒதுக்கு புறமாக சென்ற இளம் ஜோடியை வாட்ச்மேன் கண்டித்த போது போலீசில் புகார் செய்ததில் போலீசார் வாட்ச்மேனை மிரட்டியுள்ளனர். கீழடியைச் சுற்றிலும் ஏற்கனவே கஞ்சா விற்பனை களை கட்டி வரும் நிலையில் விபரீதம் ஏற்பட வாய்ப்பு உண்டு. மாவட்ட காவல்துறை கீழடியில் அத்து மீறும் ஜோடிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
