தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ சீரமைக்கப்படாத பாலாறு தடுப்பணை ஷட்டர்

சீரமைக்கப்படாத பாலாறு தடுப்பணை ஷட்டர்

சீரமைக்கப்படாத பாலாறு தடுப்பணை ஷட்டர்


ADDED : செப் 24, 2026 02:10 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 24, 2026 02:10 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சிங்கம்புணரி, செப். 25-

சிங்கம்புணரி அருகே தடுப்பணை ஷட்டர் சீரமைக்கப்படாததால் கண்மாய்களுக்கு தண்ணீர் செல்ல முடியாமல் கிராம மக்கள் அவதிப்படுகின்றனர்.

பாலாற்றில் காளாப்பூர் பகுதிக்கான தடுப்பணை பெரியபாலம் அருகே உள்ளது. இந்த அணையில் இருந்து தெற்கு கால்வாய், திருமாண்டான் கால்வாய் வழியாக அ.காளாப்பூர், சதுர்வேதமங்கலம், கரடிபட்டி, கருப்பர்கோவில் பட்டி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 70 க்கும் மேற்பட்ட கண்மாய்களுக்கு தண்ணீர் செல்லும். அணையில் 7 இரும்பு ஷட்டர்கள் அமைக்கப்பட்டிருந்தன. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு உடைந்து விட்டது. பொதுப்பணித்துறை சார்பில் அதை சீரமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் கிராமத்தினரே தற்காலிகமாக மரப்பலகையில் ஷட்டர் செய்து பயன்படுத்தி வருகின்றனர்.

மழைக்காலங்களில் பாலாற்றில் வரும் தண்ணீர் முழு அளவில் கண்மாய்களுக்கு சென்று சேராமல் வீணாகி வருகிறது. இரும்பு ஷட்டர்கள் பொருத்தப்பட்டால் தண்ணீர் வீணாவது தடுக்கப்பட்டு விவசாயிகளுக்கு முழுப்பலன் கிடைக்கும். எனவே மழைக்காலம் துவங்குவதற்கு முன்பாக பாலாற்றில் உள்ள 7 இரும்பு ஷட்டர்களையும் புதிதாக அமைத்து தர அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us