தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/பாதுகாப்பற்ற ஊருணி சுவர் பக்தர்கள் அச்சம்

பாதுகாப்பற்ற ஊருணி சுவர் பக்தர்கள் அச்சம்

பாதுகாப்பற்ற ஊருணி சுவர் பக்தர்கள் அச்சம்


UPDATED : அக் 29, 2026 10:45 PM

ADDED : அக் 29, 2026 10:41 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 29, 2026 10:45 PM ADDED : அக் 29, 2026 10:41 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே ஊருணி தடுப்புச் சுவர் பாதுகாப்பற்ற முறையில் இடிந்து விழும் நிலையில் உள்ளதால் பக்தர்கள் அச்சத்தில் உள்ளனர்.

இவ்வொன்றியத்தில் பிரான்மலை ஊராட்சியில் பிடாரியம்மன் கோயில் ஊருணி உள்ளது. மலையில் இருந்து ஓடிவரும் தண்ணீர் கால்வாய் வழியாக இந்த ஊரணியில் விழுந்து பிறகு மறுகால் பாய்ந்து மங்கைபாகர் கோயில் தெப்பக்குளத்தில் சேரும் வகையில் கட்டமைப்பு உள்ளது.

இந்நிலையில் பிடாரியம்மன் ஊருணியின் தடுப்புச்சுவர் இரண்டு பக்கம் இடிந்து விழுந்துள்ளது. கோயில் அருகே உள்ள தடுப்புச் சுவரில் வெடிப்பு ஏற்பட்டு சரியும் நிலையில் உள்ளது. இதனால் பக்தர்கள் அச்சத்தில் உள்ளனர். மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கும் போது சுவற்றின் வெடிப்புகள் பொதுமக்களுக்கு தெரியாமல் அசம்பாவிதங்கள் நடக்க வாய்ப்பு உள்ளது. இதற்கிடையில் மலையில் இருந்து தண்ணீர் வரும் கால்வாய்களில் பல இடங்களில் குப்பை தேங்கி தண்ணீர் வருவது தடைபட்டு வீணாகி வருகிறது. இதனால் சில வருடங்களாக இந்த ஊருணிக்கு முழு அளவில் தண்ணீர் வருவதில்லை. எனவே வரத்துக் கால்வாய்களையும் ஊரணி தடுப்புச் சுவரையும் சீரமைக்க மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us