/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பாதுகாப்பில்லாமல் லாரியில் செல்லும் கனரக இயந்திரத்தால் விபத்து அபாயம்
/
பாதுகாப்பில்லாமல் லாரியில் செல்லும் கனரக இயந்திரத்தால் விபத்து அபாயம்
பாதுகாப்பில்லாமல் லாரியில் செல்லும் கனரக இயந்திரத்தால் விபத்து அபாயம்
பாதுகாப்பில்லாமல் லாரியில் செல்லும் கனரக இயந்திரத்தால் விபத்து அபாயம்
ADDED : ஜன 05, 2026 06:09 AM

மானாமதுரை: மானாமதுரையில் வாகனங்களில் மண் அள்ளும் இயந்திரங்களை பாதுகாப்பின்றி கொண்டு செல்வதால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் அச்சத்திற்குள்ளாகின்றனர்.
மானாமதுரை நகர் பகுதி வழியாக தினமும் வாகனங்கள் ஆயிரக்கணக்கில் சென்று வருகின்றன. பல்வேறு பகுதிகளில் நடக்கும் பாலம், பிற கட்டுமான பணிகளுக்காக இயந்திரங்கள், மணல் அள்ளும் இயந்திரங்கள், ரோடு ரோலர் உள்ளிட்டவை தேவைப்படுகின்றன.
நீண்ட துாரங்களுக்கு இந்த வாகனங்களை சாலையில் கொண்டு சென்றால் எரி பொருள் செலவு,நேரம் அதிகரிக்கும் என்பதால் ராட்சத டிரைலர் லாரிகளில் ஏற்றி ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்கின்றனர்.
கனரக இயந்திரங்களை இரும்பு சங்கிலி, இரும்பு பட்டையால் பிணைக்கப்பட்டு நான்கு புறமும் எச்சரிக்கை சிவப்பு கொடிகளும் கட்டப்பட்டு மிதமான வேகத்தில் இயக்க வேண்டும், ஆனால் எதனையும் பின்பற்றாமல் லாரியில் ஆபத்தான முறையில் மானாமதுரை நகர் பகுதியில் அடிக்கடி கொண்டு செல்கின்றனர்.
இவ்வாறு செல்லும்போது வேகத்தடை மற்றும் நகர் பகுதியில் திடீரென பிரேக் போடும் போது இயந்திரங்கள் லாரியில் இருந்து கீழே விழ வாய்ப்பு உள்ளதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அச்சப்படுகின்றனர்.
போலீசார் இவர்களை கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

