ADDED : நவ 11, 2024 04:25 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி: காரைக்குடி கல்லுாரிச்சாலை அருகே ராஜிவ் சிலை உள்ளது. திருச்சி, புதுக்கோட்டை, அறந்தாங்கி, புதுவயல், கண்டனுார், கல்லல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பஸ்கள் இவ்வழியாக செல்கின்றன.
அருகில், நீதிமன்றம், அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள், பள்ளிகள் உள்ளதால் பயணிகள் இந்த பஸ் ஸ்டாப்பிற்கு வந்து செல்கின்றனர். முன்னாள் அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,வின் நிதியில் கட்டப்பட்டுள்ள பயணிகள் நிழற்கூடை பராமரிப்பின்றி கிடக்கிறது. பஸ் ஸ்டாப்பை பராமரித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.