தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ யு.பி.எஸ். வெடித்து விபத்து :பல லட்சம் சேதம்

 யு.பி.எஸ். வெடித்து விபத்து :பல லட்சம் சேதம்

 யு.பி.எஸ். வெடித்து விபத்து :பல லட்சம் சேதம்


ADDED : ஏப் 08, 2026 10:09 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 08, 2026 10:09 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தேவகோட்டை;தேவகோட்டை பெரிய பள்ளிவாசல் பின்புறம் வசித்து வருபவர் சம்சுதீன்.53. பெயின்டர் . இவரது மனைவி ஆயிஷா,மகன் மகளோடு வசித்து வருகின்றனர். நேற்று கணவர் வேலைக்கு சென்ற நிலையில் ஆயிஷா அருகில் உள்ள வீட்டிற்கு சென்று பேசிக் கொண்டிருந்தார்.

அக்கம் பக்கத்தினர் ஆயிஷா வீட்டில் இருந்து தீ வந்ததை பார்த்து கூச்சல் போட்டனர். ஆயிஷாவும் தனது வீட்டில் தீ மளமளவென பரவியதை கண்டு அதிர்ச்சி அடைந்து அலறினார். தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். அதற்குள் வீட்டில் இருந்த ஏ.சி. , பிரிஜ், வாஷிங்மெஷின் உட்பட ரூ 3 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் முற்றிலும் கருகியது. மேலும் பீரோவில் இருந்த 15 பவுன் தங்க நகையும், மற்றும் வெள்ளி பொருட்கள், உருகியது . ரூ 25 ஆயிரம் ரொக்கமும் எரிந்து போனது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us