/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
'ஊராட்சி மணி' புகார் திட்டம் கலெக்டர் தகவல்
/
'ஊராட்சி மணி' புகார் திட்டம் கலெக்டர் தகவல்
ADDED : ஜன 13, 2025 06:39 AM
சிவகங்கை : கிராம ஊராட்சிகளில் பிரச்னை, குறைகளை தெரிவிக்க, உதித்தது 'ஊராட்சி மணி' எண் திட்டம் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது, மாவட்ட அளவில் உள்ள 445 கிராம ஊராட்சிகள், 12 ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான பதவிக்காலம் ஜன., 5 உடன் முடிவுற்றது.
இங்கு நிர்வாகம் செய்ய தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கிராம ஊராட்சிகளில் பிரச்னை, குறைகள், தேவைகள் குறித்து அந்தந்த ஊராட்சி ஒன்றிய பி.டி.ஓ.,க்களிடம் (ஊராட்சிகள்) புகார் தெரிவிக்கலாம்.
அவரிடமட்டுமின்றி, ஊராட்சி மணி திட்டம் மூலம் புகார் தெரிவிக்க இலவச அழைப்பு எண் 155 340ல் அழைக்கலாம், என்றார்.