/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பட்டதாரிகளை வி.ஏ.ஓ.,க்களாக நியமிக்கலாம் வி.ஏ.ஓ.,சங்கம் அரசுக்கு வலியுறுத்தல்
/
பட்டதாரிகளை வி.ஏ.ஓ.,க்களாக நியமிக்கலாம் வி.ஏ.ஓ.,சங்கம் அரசுக்கு வலியுறுத்தல்
பட்டதாரிகளை வி.ஏ.ஓ.,க்களாக நியமிக்கலாம் வி.ஏ.ஓ.,சங்கம் அரசுக்கு வலியுறுத்தல்
பட்டதாரிகளை வி.ஏ.ஓ.,க்களாக நியமிக்கலாம் வி.ஏ.ஓ.,சங்கம் அரசுக்கு வலியுறுத்தல்
ADDED : டிச 18, 2025 05:34 AM
சிவகங்கை: வி.ஏ.ஓ.,க்கள் பணி நியமன கல்வி தகுதியை இளங்கலை பட்டதாரியாக உயர்த்த வேண்டும் என கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க நிறுவனர் ஆர்.போஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை: வி.ஏ.ஓ.,க்கள் தேர்வுக்கான தகுதியை பிளஸ் 2 வில் இருந்து இளங்கலை பட்டப்படிப்பு என மாற்றி அமைக்க வேண்டும். கிராம சேவை மைய கட்டடங்களை இ' சேவை மையங்களாக தரம் உயர்த்தி, அவற்றை வி.ஏ.ஓ.,க்களிடம் ஒப்படைக்க வேண்டும். கிராம உதவியாளர் பணி நியமனங்களில் இடைத்தரகர்கள் தலையீட்டை தடுத்து, நேர்மையான முறையில் மேற்கொள்ள வேண்டும்.
தமிழக அளவில் 12,550 கிராமங்கள் உள்ளன. கிராம உதவியாளர்களை முழு நேர ஊழியர்களாக்கும் போது 28,000 பேர் வரை இருப்பதால், வருவாய் கிராமத்திற்கு ஒரு கிராம உதவியாளர் என்ற நிலை வரும் வரை புதிய பணியிடங்களை அறிவிக்க கூடாது. பி' கிரேடு கிராமங்கள் தவிர்த்து அனைத்து கிராமங்களிலும் கூடுதலாக தேவைப்படும் இடங்களில் கிராம உதவியாளர்களை அரசு நியமிக்க வேண்டும். வருவாய்துறையில் பிர்க்கா, வட்டம், கோட்டம், மாவட்டம் என பிரித்துள்ளனர். ஆனால் வி.ஏ.ஓ.,க்களின் கீழ் உள்ள கிராமங்களை பெரிய, சிறியவை என இருக்கிறது. எனவே ஒரே சீராக கிராமங்களை பிரித்து வி.ஏ.ஓ.,க்களை நியமிக்க வேண்டும். தமிழக அரசு, நவ., 14 ம் தேதியை வி.ஏ.ஓ.,க்கள் தினமாக அறிவிக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

