/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
2.40 லட்சம் கோழிகளுக்கு பிப்.1 முதல் தடுப்பூசி முகாம்
/
2.40 லட்சம் கோழிகளுக்கு பிப்.1 முதல் தடுப்பூசி முகாம்
2.40 லட்சம் கோழிகளுக்கு பிப்.1 முதல் தடுப்பூசி முகாம்
2.40 லட்சம் கோழிகளுக்கு பிப்.1 முதல் தடுப்பூசி முகாம்
ADDED : ஜன 30, 2025 09:46 PM
சிவகங்கை; சிவகங்கையில் 2.40 லட்சம் கோழிகளுக்கு பிப்., 1 முதல் 14 வரை தடுப்பூசி அளிக்கப்படும் என இணை (கால்நடை) இயக்குனர் ராமசந்திரன் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
ஆண்டுதோறும் இருவார கோழி கழிச்சல் தடுப்பூசி முகாம் பிப்., 1 முதல் 14 வரை நடத்தப்படும். இந்த முறை கோழிக்கழிச்சலை தடுக்கும் விதமாக தடுப்பூசி வழங்கப்பட உள்ளது. மாவட்டத்தில் உள்ள அனைத்து கால்நடை மருந்தகங்களில் இத்தடுப்பூசி செலுத்தப்படும். இந்நோய் அனைத்து வயது கோழிகளையும் தாக்கும்.
குறிப்பாக 8 வாரத்திற்கு மேற்பட்ட கோழிகளுக்கு அதிக பாதிப்பை தரும். இந்நோயின் அறிகுறியாக கோழிக்கு உடல் நல பாதிப்பு, தீவனம், தண்ணீர் எடுக்காது. கோழி எச்சம் வெள்ளை, பச்சை நிறத்தில்அதிக துர்நாற்றத்துடன் இருக்கும். கோடைக்கு முன் இந்நோய் தாக்கும் என்பதால் பிப்., 1 முதல் 14 வரை தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இந்த வாய்ப்பை கோழி வளர்ப்போர் பயன்படுத்தி கொள்ளவும், என்றார்.