/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மானாமதுரையில் வைகை ஆறு சுத்தப்படுத்தும் பணி துவக்கம்
/
மானாமதுரையில் வைகை ஆறு சுத்தப்படுத்தும் பணி துவக்கம்
மானாமதுரையில் வைகை ஆறு சுத்தப்படுத்தும் பணி துவக்கம்
மானாமதுரையில் வைகை ஆறு சுத்தப்படுத்தும் பணி துவக்கம்
ADDED : மார் 14, 2024 11:39 PM
மானாமதுரை : நதிகளுக்கான சர்வதேச நடவடிக்கை தினத்தை முன்னிட்டு நேற்று நாடு முழுவதும் நதிகளை சுத்தப்படுத்தும் பணி துவங்கியது.
மானாமதுரையில் பொதுப்பணித்துறை சார்பில் வைகை ஆற்றை சுத்தப்படுத்தும் பணியை பொதுப்பணித்துறை செயற்பொறியாளர்பாரதிதாசன் துவக்கி வைத்தார். மண் அள்ளும் இயந்திரங்களைக் கொண்டு வைகை ஆறு சுத்தப்படுத்தும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
நிகழ்ச்சியில் உதவி செயற்பொறியாளர் மோகன் குமார், உதவி பொறியாளர் செந்தில்குமார், மானாமதுரை நகராட்சி தலைவர் மாரியப்பன் கென்னடி, துணை தலைவர் பாலசுந்தரம் மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள், பொதுப்பணித்துறை அலுவலர்கள் பெருமாள், முத்துக்குமார் கலந்து கொண்டனர்.