/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
வறண்ட கண்மாய்களுக்கு வைகை நீர் விவசாயிகள் கோரிக்கை
/
வறண்ட கண்மாய்களுக்கு வைகை நீர் விவசாயிகள் கோரிக்கை
வறண்ட கண்மாய்களுக்கு வைகை நீர் விவசாயிகள் கோரிக்கை
வறண்ட கண்மாய்களுக்கு வைகை நீர் விவசாயிகள் கோரிக்கை
ADDED : ஜன 08, 2024 06:08 AM

மானாமதுரை : வைகை ஆற்றில் வரும் நீரை மானாமதுரை, இளையான்குடி பகுதியில் வறண்டுள்ள கண்மாய்களுக்கு திருப்பி விட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேனி மாவட்டம், வைகை அணை பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக அதன் முழு கொள்ளளவான 71அடியை எட்டியுள்ளது.
அணைக்கு வரும் உபரி நீரான 3950 கன அடி நீரை சிறிய மற்றும் பெரிய மதகுகள் வழியே ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதையடுத்து தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் வைகை கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இந்நிலையில் சிவகங்கை மாவட்ட பாசன பகுதிகளில் விரகனூர் மதகு அணையிலிருந்து பார்த்திபனூர் மதகு அணை வரை உள்ள பகுதிகளில் இடது மற்றும் வலது பிரதான கால்வாய்களில் கடந்த முறை வைகை ஆற்றில் சென்ற தண்ணீர் மூலம் ஏராளமான கண்மாய்கள் நிரம்பி உள்ளன.
இந்நிலையில் தற்போது திறந்து விடப்படும் தண்ணீரை, தண்ணீர் செல்லாத கண்மாய்களுக்கு திருப்பவிட விவசாயிகள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது, மானாமதுரையில் நாட்டார், பெரியகோட்டை கால்வாய் மற்றும் பார்த்திபனூர் மதகணையில் இருந்து இடது பிரதான கால்வாய் மூலம் இளையான்குடிக்கு செல்லும் கால்வாய்களில் திருப்பிவிட்டு, வறண்ட கண்மாய்களில் நிரப்பலாம். பொதுப்பணித்துறை அதிகாரிகள் இம்முறை வரும் தண்ணீரை வறண்ட கண்மாய்களுக்கு திருப்பி விட வேண்டும், என்றனர்.