/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
குன்றக்குடியில் வைகாசி விசாக திருவிழா
/
குன்றக்குடியில் வைகாசி விசாக திருவிழா
ADDED : ஜூன் 10, 2025 01:20 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி: குன்றக்குடி சண்முகநாதப் பெருமான் கோயிலில் வைகாசி விசாக விழா நடந்தது.
காலை 7:00 மணிக்கு கோயிலில் இருந்து சண்முகநாதப் பெருமான் வெட்டிவேர் அலங்காரத்தில் ஆதினமட கொலு மண்டபத்திற்கு எழுந்தருளினார். தொடர்ந்து, ஆதின மடத்தில் குன்றக்குடி பொன்னம்பல அடிகள் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.
தொடர்ந்து, தமிழ் மாலை நிகழ்ச்சி, திருமுழுக்காட்டலும், பச்சை சாத்துப்படி பூஜையும் நடந்தது. இரவு, சண்முகநாதப் பெருமான் வெள்ளி ரதத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்தார்.