நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி; காரைக்குடியில் திருவள்ளுவர் தின விழா உள்ளிட்ட முப்பெரும் விழா நடந்தது.
ஓய்வு தமிழாசிரியர் மெய்யாண்டவருக்கு, குபேரர் கோயில் அறங்காவலர் நாச்சியப்பன் பொற்கிழியும், பாராட்டு சான்றும் வழங்கினர். வள்ளுவர் அறநிலை நிறுவனர் ஜெயம்கொண்டான் எழுதிய நுாலை பேராசிரியர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டார். திருக்கோஷ்டியூர் அரசு மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் பாண்டிக்குமார், ஆசிரியை நாகம்மை, பொறியாளர் சேவியர் அந்தோணிராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

