/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் கண்காணிக்க வி.ஏ.ஓ.,க்கள்
/
உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் கண்காணிக்க வி.ஏ.ஓ.,க்கள்
உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் கண்காணிக்க வி.ஏ.ஓ.,க்கள்
உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் கண்காணிக்க வி.ஏ.ஓ.,க்கள்
ADDED : ஜூலை 10, 2025 02:49 AM
சிவகங்கை: உங்களுடன் ஸ்டாலின்' சிறப்பு திட்ட முகாம்களுக்கு 13 துறைகள்,43 சேவைகள் குறித்த விளக்க நோட்டீஸ்,விண்ணப்ப படிவத்தை தன்னார்வலர்கள் வீடு தோறும் வழங்கி வருகின்றனர். இவர்களை கண்காணிக்க மாவட்ட அளவில் 432 வி.ஏ.ஓ.,க்கள் மேற்பார்வையாளர்களாக கலெக்டர் பொற்கொடி நியமித்துள்ளார்.
தமிழக அரசு, நகர்புறங்களில் 13 துறைகளின் மூலம் 43 சேவைகளை மக்களுக்கு கொண்டு செல்லும் விதமாக உங்களுடன் ஸ்டாலின்' சிறப்பு திட்ட முகாமை ஜூலை 3 வது வாரத்தில் நடத்தப்பட உள்ளது. அரசின் 13 துறைகள் சார்ந்த திட்டங்கள், மக்களின் கோரிக்கை விண்ணப்பம் அடங்கிய படிவத்தை வீடுதோறும் சென்று தன்னார்வலர்கள் வழங்கி வருகின்றனர். இந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, அந்தந்த தாலுகாக்களில் நடைபெறும் சிறப்பு முகாம்களில் வழங்கி, பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து 13 துறைகளின் திட்டங்கள், அதற்கான விண்ணப்பங்களை மாவட்ட அளவில் மாநகராட்சி, நகராட்சி, கிராம ஊராட்சி பகுதிகளில் பணிபுரியும் கொசு ஒழிப்பு பணியாளர்கள் மூலம் வினியோகித்து வருகின்றனர். விளக்க நோட்டீஸ், விண்ணப்பங்களை தன்னார்வலர்கள் வீடுதோறும் சென்று முறையாக சேர்க்கிறார்களா என்பதை கண்காணிக்க மாவட்ட அளவில் உள்ள 432 வி.ஏ.ஓ.,க்களை மேற்பார்வையாளர்களாகநியமித்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.