
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : பார்லிமென்டில் அம்பேத்கர் குறித்து பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து சிவகங்கையில் விடுதலை சிறுத்தை கட்சியினர் தபால் அலுவலக முற்றுகை போராட்டம் நடத்தினர்.
மாவட்ட செயலாளர் பாலையா தலைமை வகித்தார். மண்டல துணை செயலாளர் முத்துராசு முன்னிலை வகித்தார்.மாவட்ட பொருளாளர் பாஸ்கரன், துணை செயலாளர் சுடர்மணி, செய்தி தொடர்பாளர் ஆதிவளவன், ஒன்றிய செயலாளர்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர்.
வாரச்சந்தை ரோட்டில் கோஷங்கள் எழுப்பி தபால் நிலையம் நோக்கி ஊர்வலமாக வந்தனர். தபால் நிலையத்தை முற்றுகையிட முயன்றபோது, போலீசார் தடுத்தனர்.

