UPDATED : ஆக 04, 2026 05:16 PM
ADDED : ஆக 04, 2026 05:11 PM
அ நிறம் | அளவு
மானாமதுரை:மானாமதுரை வட்டார தோட்டக்கலைத்துறையில் காய்கறி எளிதாக கிடைக்கவும், எளிய முறையில் ஊட்டச்சத்தை அதிகரிக்கவும் அன்றாட தேவையான காய்கறி தேவைகளை பூர்த்தி செய்யவும் வீட்டிலேயே இயற்கை முறையில் உற்பத்தி செய்து கொள்ள ஆடிப்பட்ட காய்கறி விதை தொகுப்புகள் திட்டத்தின் கீழ் கத்திரி, தக்காளி, வெண்டை, மிளகாய், கீரை, பாகற்காய், பூசணி மற்றும் சுரை என எட்டு வகையான காய்கறி விதைகள் உள்ளடங்கிய காய்கறி தொகுப்புகள் ரூ.50 மதிப்பில் வழங்கப்பட்டு வருகின்றன.
மேற்கண்ட தொகுப்புகள் பெற விரும்புவோர் தங்களது ஆதார் அட்டை நகலுடன் தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம் என்று மானாமதுரை தோட்டக்கலை உதவி இயக்குநர் சுகன்யா தெரிவித்தார்.
