ADDED : ஜூன் 23, 2025 11:48 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை: தேவகோட்டை அருகே ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் இரவில் மாவிடுதிக்கோட்டை அருகே ரோட்டில் திரிந்த மாட்டின் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விட்டு சென்றது.
மாடு ரோட்டில் இறந்து கிடந்த நிலையில் இருட்டில் அந்த வழியாக சென்ற ஒரு கார் மாட்டின் மீது மோதி கார் சேதமடைந்தது.
இந்த விபத்து நடந்த இடத்திற்கு அருகில் தான் முதல் நாள் பஸ்-டூவீலர் மோதி இரு வாலிபர்கள் பலியாயினர்.
இந்த பகுதி இருட்டாக இருப்பதால் விளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும். மாட்டின் மீது மோதிய வாகனம் தொடர்பாகதாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.