/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மானாமதுரையில் நான்குவழிச் சாலையில் வாகனங்கள்ஆக்கிரமிப்பு
/
மானாமதுரையில் நான்குவழிச் சாலையில் வாகனங்கள்ஆக்கிரமிப்பு
மானாமதுரையில் நான்குவழிச் சாலையில் வாகனங்கள்ஆக்கிரமிப்பு
மானாமதுரையில் நான்குவழிச் சாலையில் வாகனங்கள்ஆக்கிரமிப்பு
ADDED : ஜன 24, 2025 07:28 AM

மதுரையில் இருந்து பரமக்குடி வரை நான்கு வழிச் சாலையாகவும், பரமக்குடியில் இருந்து ராமநாதபுரம் வரை இருவழிச் சாலையாகவும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு மாற்றப்பட்டு போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
இந்தச் சாலையில் தினந்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. மானாமதுரையில் சீனியப்பா நகர் பஸ் ஸ்டாப் அருகே நான்கு வழிச்சாலையில் ஏராளமான கட்டட கலவை இயந்திரங்களை நிறுத்தி வைத்துள்ளனர்.
வாகன ஓட்டிகள் கூறியதாவது: மானாமதுரை நகரை ஒட்டிய நான்கு வழி சாலை மற்றும் சர்வீஸ் ரோடுகளில் எங்கு பார்த்தாலும் போக்குவரத்திற்கு இடைஞ்சலாக வாகனங்களை நிறுத்தி வைத்துள்ளனர்.
குறிப்பாக சீனியப்பா நகர் பஸ் ஸ்டாப் அருகே ஏராளமான கலவை இயந்திரங்களையும் நிறுத்தி வைத்திருப்பதால் இரவில் விபத்து அபாயம் உள்ளது.
ஆகவே நான்கு வழிச்சாலை ஆணைய அதிகாரிகள் மானாமதுரை நகர் பகுதியில் ரோட்டில் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்கள் மற்றும் கலவை இயந்திரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

