தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ உடைந்து விழும் கால்வாய் தவறி விழும் வாகனங்கள்

 உடைந்து விழும் கால்வாய் தவறி விழும் வாகனங்கள்

 உடைந்து விழும் கால்வாய் தவறி விழும் வாகனங்கள்


ADDED : பிப் 08, 2026 05:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 08, 2026 05:43 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் கால்வாயில் தடுப்புச்சுவர் உடைந்து விழும்நிலையில், அதில் வாகனங்கள் தவறி விழுந்து பொதுமக்கள் காயமடைவது தொடர்கிறது.

இப்பேரூராட்சியில் சீரணி அரங்கம் பகுதியில் இருந்து சேவுகப்பெருமாள் கோயில் செல்லும் கீழக்காடு ரோடு புறவழிச்சாலையாக பயன்படுகிறது. இச்சாலையில் தான் வைகாசி திருவிழாவின் போது விநாயகர் ஊர்வலம் நடைபெறும்.

20 ஆண்டுகளுக்கு முன்பு குண்டு கற்களை கொண்டு இச்சாலையின் இருபுறமும் மழைநீர், கழிவு நீர் கால்வாய் கட்டப்பட்டுள்ளது. அவ்வப்போது சில இடங்களில் மராமத்து செய்யப்பட்டது. இந்நிலையில் இச்சாலையில் வாகனப் போக்குவரத்து அதிகமானதால் சில இடங்களில் கால்வாய் தடுப்புச்சுவர் உடைந்து விழுந்துள்ளது.

எதிரில் வரும் வாகனங்களுக்கு வழிவிடும்போது தவறி விழுந்து வாகன ஓட்டிகள் காய மடைகின்றனர். 20 ஆண்டுகளில் இச்சாலையின் உயரம் அதிகரித்துள்ள நிலையில் கால்வாய் சுவர் பள்ளத்தில் அமைந்துள்ளது. இதனால் விபத்து அபாயம் அதிகரித்துள்ளது. அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்கு முன்பாக கால்வாயை புதிதாக, உயரமாக அமைக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us