/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
காளையார்கோவில் போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் வீணாகி வரும் வாகனங்கள்
/
காளையார்கோவில் போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் வீணாகி வரும் வாகனங்கள்
காளையார்கோவில் போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் வீணாகி வரும் வாகனங்கள்
காளையார்கோவில் போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் வீணாகி வரும் வாகனங்கள்
ADDED : மே 16, 2025 03:15 AM

சிவகங்கை: காளையார்கோவில் போலீஸ் ஸ்டேஷனில் பல்வேறு வழக்குகளில் பிடிபட்ட டூவீலர்கள், கார்கள் பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு வீணாகி வருகிறது.
காளையார்கோவில் காளையப்பன் தெருவில் உள்ளது போலீஸ் ஸ்டேஷன். இந்த பகுதி குடியிருப்பு பகுதி. அருகில் போலீஸ் குடியிருப்பு, சர்ச், கடைகள் உள்ளது. போலீஸ் ஸ்டேஷன் எதிரே உள்ள பகுதியில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட டூவீலர்கள், கார்களை பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்.
இதனை சுற்றி செடிகள் வளர்ந்து புதர் மண்டி வாகனங்கள் வீணாகி வருகிறது. இந்த வாகனங்களை அப்புறப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.