/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
வேளாரேந்தல்- - சூராணம் ரோடு, பாலம் ரூ.6.24 கோடியில் புதுப்பிக்கும் பணி
/
வேளாரேந்தல்- - சூராணம் ரோடு, பாலம் ரூ.6.24 கோடியில் புதுப்பிக்கும் பணி
வேளாரேந்தல்- - சூராணம் ரோடு, பாலம் ரூ.6.24 கோடியில் புதுப்பிக்கும் பணி
வேளாரேந்தல்- - சூராணம் ரோடு, பாலம் ரூ.6.24 கோடியில் புதுப்பிக்கும் பணி
ADDED : ஜன 13, 2025 06:40 AM

சிவகங்கை : காளையார்கோவில் ஒன்றியம் சார்பில் வேளாரேந்தல் -- சூராணம் சாலை புதுப்பிக்கும் பணியில் கோடிக்கரை வளைவு பாலத்தை புதுப்பிக்காததால் விபத்து ஏற்படும் அச்சம் நிலவுகிறது.
தஞ்சாவூர்- சாயல்குடி தேசிய நெடுஞ்சாலையில் வேளாரேந்தல் முதல் சூராணம் விலக்கு ரோடு வரை 8.5 கி.மீ., ரோடு மற்றும் அதற்குள் உள்ள 15 பாலங்களை புதுப்பிக்க ரூ.6.24 கோடி ஒதுக்கினர்.
இந்த ரோடு வழியாக சிவகங்கை - ஆர்.எஸ்., மங்கலம், மதுரையில் இருந்து சூராணத்திற்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இப்பகுதி மக்கள் பஸ்களில் சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு சென்று வர முடியும்.
இந்நிலையில், ரோடு புதுப்பிக்கும் பணியில் 15 பாலங்களை புதிதாக கட்ட தேர்வு செய்த நிர்வாகம், கோடிக்கரை வளைவில் உள்ள பாலத்தை புதுப்பிக்க டெண்டரில் சேர்க்கவில்லை.
இதனால், பாலத்தின் மேற்சுவர் உடைந்தும், ரோட்டிற்கு சமமாக உள்ளதால் வளைவில் பஸ்கள் திரும்பும் போது எளிதில் பாலத்தின் தடுப்பு சுவர் சேதமாகி வருகின்றன.
ஊராட்சி ஒன்றிய உதவி பொறியாளர் ஜோசப் ராஜா கூறியதாவது: கோடிக்கரை வளைவு பாலம் தரமாக இருப்பதால், அதை சேர்க்கவில்லை. இருப்பினும் சேதமான மேல்தளத்தை பூசி விட்டுள்ளோம்.
தற்போது அறுவடை காலமாக இருப்பதால் விவசாயிகள் நலன் கருதி ரோடு புதுப்பிக்கும் பணி சிறிதளவு நடந்து வருகிறது.
நெல் அறுவடைக்கு பின் ரோடு, பாலம் புதுப்பிக்கும் பணி துரிதமாக நடைபெறும், என்றார்.