ADDED : டிச 26, 2024 04:56 AM

சிவகங்கை: சிவகங்கையில் வேலுநாச்சியார் நினைவு நாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் பல்வேறு அரசியல் தலைவர்கள் சமூக அமைப்பினர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
ராணி வேலுநாச்சியார் அறக்கட்டளை நிர்வாகிகள், சிவகங்கை தேவஸ்தான அறங்காவலர் மதுராந்தகி நாச்சியார் முன்னிலையில் நடந்தது. ராமநாதபுரம் ஆதித்ய சேதுபதி பங்கேற்றார்.
108 திருவிளக்கு பூஜையை கோயம்புத்துார் காமாட்சிபுரி ஆதினம் பஞ்சலிங்கேஸ்வர சுவாமி துவக்கி வைத்தார். பா.ஜ.,நகர் தலைவர் உதயா, நகராட்சி தலைவர் துரைஆனந்த்,அ.தி.மு.க., எம்.எல்.ஏ., செந்தில்நாதன், காங்., மாவட்ட தலைவர் சஞ்சய்காந்தி , தமிழ் மாநில காங்., மாநில பொதுச் செயலாளர் துரை கருணாநிதி, அ.ம.மு.க., மாவட்ட செயலாளர் தேர்போகி பாண்டி, அ.தி.மு.க., தொண்டர்கள் மீட்பு குழு மாவட்ட செயலாளர் அசோகன், நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் மற்றும் பல்வேறு அமைப்பினர் மரியாதை செலுத்தினர்.

