/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கையில் வேலுநாச்சியார் பிறந்த நாள் விழா அமைச்சர், எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்பு
/
சிவகங்கையில் வேலுநாச்சியார் பிறந்த நாள் விழா அமைச்சர், எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்பு
சிவகங்கையில் வேலுநாச்சியார் பிறந்த நாள் விழா அமைச்சர், எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்பு
சிவகங்கையில் வேலுநாச்சியார் பிறந்த நாள் விழா அமைச்சர், எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்பு
ADDED : ஜன 04, 2024 02:10 AM

சிவகங்கை; சிவகங்கையில் வேலுநாச்சியார் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்பட்டது. அரசு சார்பிலும், பல்வேறு கட்சியினர்,அமைப்பினர் சார்பில் மரியாதை செலுத்தினர்.
சிவகங்கை அருகே பையூரில் உள்ள வேலுநாச்சியார் மணிமண்டபத்தில் கலெக்டர் ஆஷா அஜித் தலைமையில் அரசு விழா நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் மோகனசந்திரன் வரவேற்றார்.
அமைச்சர் பெரியகருப்பன் வேலுநாச்சியார் சிலைக்கு மாலை அணிவித்தார். எம்.எல்.ஏ.,க்கள் (காங்.,) மாங்குடி, (தி.மு.க.,) தமிழரசி, சிவகங்கை ஊராட்சி ஒன்றிய தலைவர் மஞ்சுளா, நகராட்சி தலைவர் துரை ஆனந்த், துணை தலைவர் கார்கண்ணன், சூரக்குளம் புதுக்கோட்டை ஊராட்சி தலைவர் மலைச்சாமி, பங்கேற்றனர்.
பா.ஜ., சார்பில் மாவட்ட தலைவர் சத்தியநாதன், கலைஇலக்கிய அணி மாநில நிர்வாகி ரஞ்சனா நாச்சியார், மாவட்ட பொது செயலாளர் மார்த்தாண்டன், துணை தலைவர் சுகனேஸ்வரி, நகர் தலைவர் உதயா, ஒன்றிய தலைவர் பில்லப்பன் பங்கேற்றனர். காங்., சார்பில் மாவட்ட தலைவர் சஞ்சய் காந்தி தலைமையில், முன்னாள் மாவட்ட தலைவர் ராஜரத்தினம், நகராட்சி கவுன்சிலர்கள் விஜயகுமார், மகேஷ், முன்னாள் நகராட்சி கவுன்சிலர்கள் சண்முகராஜன் பங்கேற்றனர். மற்றொரு தரப்பினர் சார்பில் முன்னாள் மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி தலைமையில் பங்கேற்றனர்.
அ.தி.மு.க.,வில் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ., தலைமையில் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன், ஜெ., பேரவை மாவட்ட செயலாளர் இளங்கோ, ஒன்றிய செயலாளர்கள் கருணாகரன், செல்வமணி, சேவியர், நகர் செயலாளர் என்.எம்.,ராஜா பங்கேற்றனர்.
பன்னீர் செல்வம் அணி மாவட்ட செயலாளர் கே.ஆர்.,அசோகன், மாவட்ட இளைஞரணி செயலாளர் வழக்கறிஞர் சுந்தரபாண்டியன், நகர் செயலாளர் கே.வி.,சேகர், மாரிமுத்து பங்கேற்றனர். விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மாநில பொது செயலாளர் ஆனந்த், தெற்கு மாவட்ட தலைவர் முத்துபாரதி பங்கேற்றனர்.
ம.தி.மு.க., மாவட்ட செயலாளர் மனோகரன், விடுதலை சிறுத்தை தெற்கு மாவட்ட செயலாளர் பாலையா, முக்குலத்தோர் கூட்டமைப்பு சார்பில் செல்வமீனாள், சிவகங்கை தமிழ்சங்கம் சார்பில் தலைவர் கண்ணப்பன், கவுரவ தலைவர் ஜவஹர், முத்துக்கண்ணன், யுவராஜா பங்கேற்றனர்.
கூடுதல் எஸ்.பி., நமச்சிவாயம் தலைமையில் டி.எஸ்.பி., சிபிசாய் சவுந்தர்யன், இன்ஸ்பெக்டர் கோட்டைச்சாமி மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.