ADDED : ஏப் 23, 2025 05:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிங்கம்புணரி : சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் ஐயனார் கோயில் முன்புறமுள்ள சேவுகமூர்த்தி கோசாலையில் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் கால்நடை மருத்துவ முகாம் மருத்துவர் ரஞ்சிதா தலைமையில் நடந்தது.
இலுப்பூர் மதர் தெரசா வேளாண்மை கல்லூரி மாணவர்கள் முகாம் ஏற்பாடுகளை செய்தனர். முகாமில் கன்று குட்டிகளுக்கு குடற்புழு நீக்கும் மருந்து, தாது உப்பு கலவை, வைட்டமின் பி சத்து மருந்து வழங்கப்பட்டது.

