/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
வேட்டையன்பட்டி கோயில் ஆடித்திருவிழா
/
வேட்டையன்பட்டி கோயில் ஆடித்திருவிழா
ADDED : ஆக 02, 2025 11:13 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிங்கம்புணரி : சிங்கம்புணரி அருகே வேட்டையன்பட்டி காமாட்சி பரமேஸ்வரி அம்மன் கோயிலில் ஆடித்திருவிழா நடந்தது
ஜூலை 25 ல் காப்பு கட்டுதலுடன் தொடங்கிய விழாவின் ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு அபிஷேகம், ஆராதனை நடந்தது. ஜூலை 29 ல் ஊஞ்சல் தரிசனம் நடந்தது. ஆக. 1 ல் பால்குட ஊர்வலம் நடந்தது. பெண்கள் பூத்தட்டு எடுத்து வந்து அம்மனுக்கு பூச்சொரிதல் செய்தனர். நேற்று 308 திருவிளக்கு பூஜை நடந்தது. பெண்கள் திருவிளக்கேற்றி அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து இரவு 8:00 மணிக்கு முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. இன்று ஆடிப்பெருக்கை முன்னிட்டு அன்னதானம் நடக்கிறது.