/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
முனைவென்றியில் சேதமான பள்ளி கட்டடம் கிராம மக்கள் கலெக்டரிடம் புகார்
/
முனைவென்றியில் சேதமான பள்ளி கட்டடம் கிராம மக்கள் கலெக்டரிடம் புகார்
முனைவென்றியில் சேதமான பள்ளி கட்டடம் கிராம மக்கள் கலெக்டரிடம் புகார்
முனைவென்றியில் சேதமான பள்ளி கட்டடம் கிராம மக்கள் கலெக்டரிடம் புகார்
ADDED : டிச 23, 2025 05:47 AM

சிவகங்கை: இளையான்குடி அருகே முனைவென்றி அரசு மேல்நிலை பள்ளியில் சேதமான கட்டடங்களை சீரமைக்க கோரி கிராமத்தினர், பள்ளி மேலாண்மை குழுவினர் கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
இப்பள்ளியில் முனைவென்றி, பெத்தானேந்தல், முள்ளியரேந்தல், ஆலம்பச்சேரி, தெ.புதுக்கோட்டை, கீழ, மேல நெட்டூர், பிராமணக்குறிச்சி உட்பட 20க் கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் 239 பேர் படிக்கின்றனர்.
இங்கு கட்டிக் கொடுக்கப்பட்ட உயர்தர (ைஹடெக் லேப்) ஆய்வக கட்டடம் மற்றும் பள்ளி வகுப்பறை கட்டடங்களை தொடர்ந்து பராமரிக்காமல் விட்டுவிட்டனர். இதனால் கட்டட சுவரில் விரிசல் ஏற்பட்டு, மழை நீர் பள்ளிக்குள் விழும் நிலை ஏற்பட்டு உள்ளது. அதே போன்று மாணவர்களுக்கு உயிர் அச்சத்தை ஏற்படுத்தும் விதமாக பள்ளி கட்டட உள்சுவர் சேதமடைந்து, விழுந்து விட்டது.
பள்ளி வளாகத்தில் உள்ள மின்கம்பமும் சேதமடைந்து காணப் படுகின்றன. எனவே இப்பள்ளியில் சேதமடைந்த வகுப்பறை கட்டடங்களை செப்பனிட்டு தர வேண்டும் என பல முறை பொதுப்பணித்துறை, கல்வித்துறை, இளையான்குடி பி.டி.ஓ.,விடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.
இதையடுத்து முனைவென்றி கிராம மக்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் நேற்று சிவகங்கை கலெக்டர் அலுவலக குறைதீர் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபியிடம் புகார் அளித்தனர்.

