/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சீரமைக்கப்படாத சிறுவாச்சி ரோடு போராட கிராம மக்கள் முடிவு
/
சீரமைக்கப்படாத சிறுவாச்சி ரோடு போராட கிராம மக்கள் முடிவு
சீரமைக்கப்படாத சிறுவாச்சி ரோடு போராட கிராம மக்கள் முடிவு
சீரமைக்கப்படாத சிறுவாச்சி ரோடு போராட கிராம மக்கள் முடிவு
ADDED : அக் 11, 2025 04:17 AM
தேவகோட்டை: தேவகோட்டையிலிருந்து சிறுவாச்சி வழியாக கண்ணங்குடி கிராமத்திற்கு தார் ரோடு செல்கிறது. இந்த ரோட்டில் சிறுவாச்சி, மாடக்கோட்டை, தேரளப்பூர், உட்பட10 கிராமங்கள் உள்ளன.
இந்த கிராமங்கள் மட்டுமின்றி இந்த ரோடு வழியாக புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோயில், அறந்தாங்கி, ஏம்பல் உட்பட முக்கிய ஊர்களுக்கு செல்லலாம்.
அரசு பஸ்கள் 15 க்கு மேற்பட்டமுறை இந்த வழித்தடத்தில் சென்று வரும் நிலையில் இந்த ரோடு பராமரிப்பின்றி பல ஆண்டுகளாக மோசமாக உள்ளது.
டூவீலர்கள் கூட செல்ல முடியாத நிலையில் பள்ளங்களால் வளைந்து நெளிந்து செல்ல வேண்டியுள்ளது.
கிராமத்தினர் பல முறை நெடுஞ்சாலைத் துறையினரிடம் புகார் செய்தும் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை.
பள்ளங்களில் கிராமத்தினரே அவ்வப்போதுமண்ணை வெட்டி போட்டாலும் மழை காலத்தில் மண் கரைந்து காணாமல் போகிறது.
போராட முடிவு : தேவகோட்டை வட்டார மக்கள் மன்றத்தின் சார்பில் அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர்.தேவகோட்டையிலிருந்து செல்லும் சருகணி சாலை, அனுமந்தக்குடி வழி கண்ணங்குடி சாலை, ஆறாவயல் சாலை, புதுவயல் சாலைகள் அகலப்படுத்தப்பட்டு புதிதாக ரோடு போடப்பட்டுள்ளது.
விபத்துக்கள் அதிகளவில் நடந்தும், போக்கவரத்துக்கு மக்கள் சிரமப்படுவது தெரிந்தும் அதிகாரிகள் சிறுவாச்சி ரோட்டை புறக்கணிப்பது ஏன்.
தொடர்ந்து சிறுவாச்சி ரோடு புதுப்பிக்காமல் புறக்கணித்தால் இப்பகுதியில் உள்ள அனைத்து கிராமத்தினரும் இணைந்து போராட முடிவு செய்தள்ளதாக அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.