/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கைக்கு பஸ் வசதி கிராம மக்கள் வலியுறுத்தல்
/
சிவகங்கைக்கு பஸ் வசதி கிராம மக்கள் வலியுறுத்தல்
ADDED : அக் 30, 2025 03:57 AM
திருப்பாச்சேத்தி: பழையனுாரில் இருந்து பத்துப்பட்டி, தாழிக்குளம், சலுப்பனோடை, பிச்சைப்பிள்ளையேந்தல், திருப்பாச்சேத்தி வழியாக சிவகங்கைக்கு பஸ் வசதி கிடையாது. சலுப்பனோடை, பிச்சைப்பிள்ளையேந்தல் உள்ளிட்ட ஐந்து கிராம மக்கள் சிவகங்கை செல்ல திருப்பாச்சேத்தி நடந்து வந்து பஸ் ஏறி செல்ல வேண்டும். அல்லது திருப்புவனம் சென்று சிவகங்கைக்கு பஸ் ஏறி செல்ல வேண்டும், பிச்சைப்பிள்ளையேந்தல், தாழிக்குளம், சலுப்பனோடை உள்ளிட்ட கிராமங்களில் 5ம் வகுப்பு வரை மட்டுமே உள்ளது. அதற்கு பின் திருப்பாச்சேத்தி, திருப்புவனம், மானாமதுரை சென்றுதான் கல்வி பயில முடியும்.
கிராமத்தின் அடிப்படை வசதிகள் குறித்து மனு அளிக்க திருப்பாச்சேத்தி வரை ஐந்து கி.மீ., தூரம் நடந்து வந்து சிவகங்கை, திருப்புவனம் செல்ல வேண்டியுள்ளது. சலுப்பனோடை உள்ளிட்ட கிராமங்களில் இருந்து மாணவர்கள் நடந்து வந்து தான் பள்ளி, கல்லூரி செல்ல முடியும், மதுரை மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து சலுப்பனோடை வரை அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டு வந்தது. ரோடு பணிக்காக போக்குவரத்து ஒரு வருடத்திற்கு முன் நிறுத்தப்பட்டது.
சாலைப்பணிகள் நிறைவடைந்தும் மீண்டும் பஸ் போக்குவரத்து தொடங்கப்படவில்லை. டவுன் பஸ் போக்குவரத்தை மீண்டும் தொடங்க வேண்டும், பழையனூரில் இருந்து சலுப்பனோடை, தாழிக்குளம் வழியாக மாவட்ட தலைநகரான சிவகங்கைக்கு பஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என கிராமமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

