/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
குண்டும் குழியுமான இணைப்பு ரோடு பராமரிக்க கிராமத்தினர் கோரிக்கை
/
குண்டும் குழியுமான இணைப்பு ரோடு பராமரிக்க கிராமத்தினர் கோரிக்கை
குண்டும் குழியுமான இணைப்பு ரோடு பராமரிக்க கிராமத்தினர் கோரிக்கை
குண்டும் குழியுமான இணைப்பு ரோடு பராமரிக்க கிராமத்தினர் கோரிக்கை
ADDED : அக் 09, 2025 04:45 AM

கீழச்சிவல்பட்டி திருப்புத்துார் அருகே சிறுகூடல்பட்டி, ஊர்குளத்தான்பட்டி வழியாக செல்லும் இணைப்பு ரோட்டில் சேதமான பகுதிகளை பராமரிக்கவும் தொடர்ந்து விரிவுபடுத்தி சாலையை மேம்படுத்தவும் கிராமத்தினர் கோரியுள்ளனர்.
திருப்புத்துாரிலிருந்து காரைக்குடி செல்லும் ரோட்டில் கும்மங்குடிப்பட்டி அருகில் விலக்கு ரோடாக பிரிந்து ஊர்குளத்தான்பட்டி, சிறுகூடல்பட்டி வழியாக சென்று இணைப்பு ரோடு திருப்புத்தூர் -புதுக்கோட்டை ரோட்டை இணைக்கிறது. இந்த ரோட்டில் இப்பகுதி கிராமத்தினர் மட்டுமின்றி புதுக்கோட்டை ரோட்டில் வரும் பயணிகளும் பயன்படுத்தி பிள்ளையார்பட்டி,குன்றக்குடி செல்கின்றனர்.
இந்த ரோட்டில் போக்குவரத்து தொடர்ந்து காணப்படுகிறது. அண்மையில் இப்பகுதி கண்மாய்களில் தேசிய நெடுஞ்சாலைப் பணிக்காக மண் வெட்டி எடுத்துச் செல்லப்பட்டது. அதற்காக கனரக வாகனங்கள் இந்த ரோட்டில் சென்றதால் பல இடங்களில் ரோடு சேதமடைந்துள்ளது. இப்பகுதி உள்ளூர் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஊர்குளத்தான்பட்டி பகுதியிலும், சிறுகூடல்பட்டி குடியிருப்பு பகுதிகளில் சேதமான பகுதிகளில் விரைவாக பராமரிக்கவும், தொடர்ந்து ரோட்டை விரிவுபடுத்தி முழுமையாக புனரமைக்கவும் கிராமத்தினர் கோரியுள்ளனர்.