/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பத்து நாட்களாக மின்சாரம் இன்றி தவிக்கும் கிராம மக்கள்
/
பத்து நாட்களாக மின்சாரம் இன்றி தவிக்கும் கிராம மக்கள்
பத்து நாட்களாக மின்சாரம் இன்றி தவிக்கும் கிராம மக்கள்
பத்து நாட்களாக மின்சாரம் இன்றி தவிக்கும் கிராம மக்கள்
ADDED : அக் 30, 2025 03:56 AM
திருப்புவனம்: திருப்புவனம் அருகே தட்டான்குளத்தில் கடந்த பத்து நாட்களாக மின்சாரம் இன்றி கிராம மக்கள் குடிநீர் மோட்டார் உள்ளிட்ட எதுவும் இயக்க முடியாமல் தவிப்பிற்குள்ளாகி வருகின்றனர்.
தட்டான்குளம் கிராமத்தில் அகல ரயில் பாதையின் மறுபுறம் 30க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்புகளுக்கு கழுகேர்கடை விவசாய மின் இணைப்பில் இருந்து மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது .மழை காலம், காற்று வீசும் காலங்களில் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படும், இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு பிறகு சரி செய்யப்பட்டு மீண்டும் இணைப்பு வழங்கப்படும், கடந்த பத்து நாட்களுக்கு முன் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
மின்வாரிய அதிகாரிகளிடம் முறையிட்டும் இன்று வரை சரி செய்யப்படவில்லை. இதனால் வீடுகளில் குடிநீர் மோட்டார் கூட இயக்க முடியாமல் தவித்து வருகின்றனர். அலைபேசி உள்ளிட்டவற்றிற்கு நான்கு வழிச்சாலையை ஒட்டியுள்ள வீடுகளில் வந்து சார்ஜ் செய்ய வேண்டியுள்ளது. இரவு நேரங்களில் மின்சாரம் இல்லாததால் விஷபூச்சிகள் உலா வருகின்றன.
கந்தசாமி கூறுகையில்: கழுகேர்கடை விவசாய இணைப்பில் இருந்து மின்சாரம் வழங்கப்படுவதால் மாதத்தில் பாதி நாட்கள் துண்டிக்கப்படுகிறது. அதனை மாற்றி நெடுஞ்சாலையை ஒட்டி உள்ள இணைப்பில் இருந்து இரண்டு மின்கம்பங்கள் புதிதாக நடவு செய்து இணைப்பு நேரடியாக வழங்கலாம், பலமுறை மின்வாரிய அதிகாரிகளிடம் முறையிட்டும் இன்று வரை நடவடிக்கை இல்லை. பத்து நாட்களாக மின்சாரம் இன்றி இருட்டுக்குள் அச்சத்துடன் உள்ளோம், என்றார்.

