/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
குவாரியை மூட வலியுறுத்தி கிராமத்தினர் போராட்டம்
/
குவாரியை மூட வலியுறுத்தி கிராமத்தினர் போராட்டம்
ADDED : ஜூலை 19, 2025 11:45 PM
சிங்கம்புணரி:சிங்கம்புணரி அருகே கிராவல் மண், கல் குவாரியை மூட வலியுறுத்தி கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.
இவ்வொன்றியத்தில் எஸ்.மாம்பட்டி கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான கிராவல் மண்குவாரி செயல்படுகிறது. அங்கு கல் தோண்டி எடுக்கவும் அனுமதி பெறப்பட்டுள்ளது.
ஏற்கனவே கிராவல் மண் வெட்டி எடுக்கப்பட்டுள்ள நிலையில் கல் குவாரி அமைந்தால், அப்பகுதியில் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டு விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கும், வனப்பகுதியில் வசிக்கும் புள்ளிமான் உள்ளிட்ட வனவிலங்கு பாதிக்கப்படும், நிலத்தடி நீர் குறைந்து, காற்றுமாசு ஏற்படும் எனவும், இதனால் குவாரியை மூட வேண்டும் என வலியுறுத்தி எஸ்.மாம்பட்டி உள்ளிட்ட கிராம மக்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தும்பைப்பட்டி விலக்கு அருகே கொட்டகை அமைத்து போராட்டம் நடத்தினர். அங்கு வந்த வருவாய்த்துறை அதிகாரிகள், விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாகவும், அதுவரை தற்காலிகமாக குவாரியை நிறுத்தி வைப்பதாகவும் உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.