/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
காளையார்கோவிலில் இளைஞர் கொலை; கிராமத்தினர் மறியல்: 4 பேர் கைது
/
காளையார்கோவிலில் இளைஞர் கொலை; கிராமத்தினர் மறியல்: 4 பேர் கைது
காளையார்கோவிலில் இளைஞர் கொலை; கிராமத்தினர் மறியல்: 4 பேர் கைது
காளையார்கோவிலில் இளைஞர் கொலை; கிராமத்தினர் மறியல்: 4 பேர் கைது
ADDED : ஏப் 15, 2025 06:00 AM

சிவகங்கை, ஏப்.15--
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலில் சரத்குமார் 29 என்பவரை கொலை செய்தவர்களை கைது செய்யக்கோரி, கிராமத்தினர் மதுரை -- தொண்டி ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
காளையார்கோவில் அருகே நெடுவத்தாவு சரத்குமார் 29, மரக்காத்துார் சிவசங்கர் 28. நேற்று முன்தினம் இரவு இருவரும் இருப்பான்பூச்சி கிராமத்தில் நின்று பேசிக்கொண்டிருந்தனர். அங்கு டூவீலரில் வந்த மர்ம கும்பல் இருவரையும் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பினர். இதில் சரத்குமார் பலியானார். காயமுற்ற சிவசங்கரை சிவகங்கை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். காளையார்கோவில் போலீசார் விசாரணையில் இரு தரப்பிற்கும் பெண் விவகாரத்தில் முன் விரோதம் இருந்தது தெரியவந்தது.
இந்நிலையில் நேற்று நெடுவத்தாவு மற்றும் காளையார்கோவிலை சுற்றியுள்ள கிராமத்தினர், கொலை வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்யக்கோரி மதுரை - தொண்டி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். காலை 9:00 மணி முதல் 11:00 மணி வரை நடந்த மறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. எஸ்.பி., ஆஷிஷ் ராவத் தலைமையில் போலீசார் கிராமத்தினரிடம் பேச்சு வார்த்தை நடத்தி, நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.
காளையார்கோவிலை சேர்ந்த விக்ரம் 22, ஜனா 22, தவசுகுடி பிரபு 35, சிவா 29 ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.