ADDED : ஜன 16, 2025 05:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை: மானாமதுரையில் விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் விவேகானந்தர் பிறந்த நாளை கொண்டாடினர். விவேகானந்தர் படத்திற்கு சிறப்பு வழிபாடு செய்தனர்.
பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து ஊர்வலமாக சென்றனர். பா.ஜ., ஒன்றிய தலைவர் ரவிச்சந்திரன், ஹிந்து முன்னணி நிர்வாகி குப்புகந்தன் பங்கேற்றனர்.
* சிவகங்கை சுவாமி விவேகானந்தா உயர்நிலை பள்ளியில் தாளாளர் சங்கரன் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் சுதாகர் வரவேற்றார். நகராட்சி தலைவர் துரை ஆனந்த் ஊர்வலத்தை துவக்கி வைத்தார். ஆசிரியர், மாணவர்கள் பங்கேற்றனர். விவேகானந்தர் பட ஊர்வலம் கவுரிவிநாயகர் கோயிலில் இருந்து நகரின் முக்கிய வீதிகளில் சென்று, பள்ளிக்கு வந்தது.

