ADDED : ஜன 26, 2024 05:25 AM

சிவகங்கை: தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு சிவகங்கை அரண்மனைவாசலில் வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் ஆஷா அஜித் துவக்கி வைத்தார். மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன், சிவகங்கை கோட்டாட்சியர் சுகிதா முன்னிலை வகித்தனர். கலெக்டர் பி.ஏ., (பொது) ஜெயமணி, தாசில்தார்கள் சிவகங்கை சிவராமன், (தேர்தல் பிரிவு) மேசியாதாஸ் பங்கேற்றனர்.
சிவகங்கை இன்ஸ்பெக்டர் கோட்டைச்சாமி தலைமையில் பாதுகாப்பு அளித்தனர். கலெக்டர் துவக்கி வைத்த விழிப்புணர்வு ஊர்வலம் அரண்மனைவாசலில் இருந்து புறப்பட்டு கலெக்டர் அலுவலகத்தில் நிறைவு பெற்றது. கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பரிசளிப்பு விழாவில் வாக்காளர் விழிப்புணர்வு தொடர்பாக நடத்திய போட்டிகளில் வெற்றி பெற்ற கல்லுாரி, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசு தொகை, சான்றினை கலெக்டர் வழங்கினார். ரங்கோலி கோலமிட்ட 3 மகளிர் குழுவினருக்கும் பரிசு வழங்கினார். ஏற்பாடுகளை மாவட்ட தேர்தல் பிரிவினர் செய்திருந்தனர்.

