ADDED : ஏப் 09, 2026 06:31 PM
அ நிறம் | அளவு
சிவகங்கை:காரைக்குடியில் வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. காரைக்குடி அறிவியல் இயக்க கிளை தலைவர் சையது தலைமை வகித்தார். காரைக்குடி தாசில்தார் ராஜா ஊர்வலத்தை துவக்கி வைத்தார். இந்திய செஞ்சிலுவை சங்க மாவட்ட தலைவர் சுந்தரராமன், அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் பிரபு, காரைக்குடி தேர்தல் தாசில்தார் பிரகாஷ், செஞ்சிலுவை சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பரிதா பேகம், தேர்தல் ஒருங்கிணைப்பாளர் ஆதீஷ்வரன் முன்னிலை வகித்தனர்.
கல்வி குழும நிர்வாக இயக்குனர் மனோகர், தினேஷ், லயன்ஸ் லியோ கிளப் ஆலோசகர் பழனிவேல், அறிவியல் இயக்க மாவட்ட துணை தலைவர் ராஜூ , கிளை செயலாளர் டென்சிங் அருள்ராஜ், ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர். ///
