ADDED : மார் 26, 2026 06:15 AM
அ நிறம் | அளவு
திருப்புத்துார்: திருப்புத்துார் தொகுதிக்கான மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் நேற்று ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வைக்கப்பட்டது.
அனைத்துக் கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் தேர்தல் நடத்தும் அலுவலர் சிவபாலன், தாசில்தார் மாணிக்கவாசகம் உள்ளிட்டோர் இயந்திரங்களை காண்பித்தனர். ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் வைக்கப்பட்டது. மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம்,கட்டுப்பாடு இயந்திரங்கள் தலா 437 மற்றும் விவிபாட் எனப்படும் ஓட்டுசரிபார்ப்பு இயந்திரம் 467 வைக்கப்பட்டுள்ளது. இம்முறை ஓட்டுசரிபார்ப்பு இயந்திரத்தில் சின்னத்துடன் வேட்பாளரின் படமும் தெரிய வரும். எஸ்.ஐ.,தலைமையிலான போலீஸ் கண்காணிப்பும் போடப்பட்டுள்ளது.
