/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
காத்திருந்த காங்., எம்.எல்.ஏ., மேயர் தாமதத்தால் ஆத்திரம்
/
காத்திருந்த காங்., எம்.எல்.ஏ., மேயர் தாமதத்தால் ஆத்திரம்
காத்திருந்த காங்., எம்.எல்.ஏ., மேயர் தாமதத்தால் ஆத்திரம்
காத்திருந்த காங்., எம்.எல்.ஏ., மேயர் தாமதத்தால் ஆத்திரம்
ADDED : டிச 16, 2025 05:07 AM
காரைக்குடி: காரைக்குடி புதிய பஸ் ஸ்டாண்டில் நடந்த புதியபஸ் தொடக்க விழாவில் மேயருக்காக மாங்குடி எம்.எல்.ஏ., ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்ததால் அவரது ஆதரவாளர்கள் அதிருப்தியடைந்தனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து திருப்புத்துார், சிங்கம்புணரி, ஒட்டன்சத்திரம் வழியாக பழநிக்கு புதிய அரசு பஸ்சும், காரைக்குடி ரயில்வே ஸ்டேஷன் வழியாக இலுப்பக்குடி, அரியக்குடி வழியாக தேவகோட்டைக்கு புதிய டவுன் பஸ்சும் இயக்கப்பட உள்ளது. புதிய பஸ்களை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நேற்று காலை 9:00 மணிக்கு நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இதில் பங்கேற்க மாங்குடி எம்.எல்.ஏ., நீண்ட நேரமாக பஸ் ஸ்டாண்டில் காத்திருந்தார். மேயர் முத்து துரைக்கு அழைப்பு விடப்பட்டிருந்த நிலையில், 10:00 மணியாகியும் மேயர் வரவில்லை. எம்.எல்.ஏ., ஆதரவாளர்கள் அதிருப்தி அடைந்தனர். தங்களுக்கு பல வேலை உள்ளது எவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினர். அதிகாரிகள் மேயருக்கு போன் செய்து கொண்டே இருந்தனர். காலை 10:00 மணிக்கு மேல் வந்த மேயர் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
சில நாட்களுக்கு முன்பு நடந்த குப்பை வண்டி வழங்கும் நிகழ்ச்சிக்கு கார்த்தி எம்.பி., ஒன்றரை மணி நேரம் தாமதமாக வந்தார். நான் கோபப்பட்டேனா என அதிகாரிகளிடம் தெரிவித்தார். அவரை அதிகாரிகள் சமாதானம் செய்ய தொடர்ந்து எம்.எல்.ஏ., மற்றும் மேயர் கொடியசைத்து புதிய பஸ்சை தொடங்கி வைத்தனர்.

