/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
காத்திருப்பு காரைக்குடி மண்டல டிரைவர், கண்டக்டர்கள் பல ஆண்டாக கிடைக்காத ஈட்டிய விடுப்புத்தொகை

ADDED : டிச 03, 2024 05:42 AM
மானாமதுரை: அரசு போக்குவரத்து கழக காரைக்குடி மண்டலத்திற்கு கீழ் பணியாற்றும் டிரைவர்,கண்டக்டர்களுக்கு 10 வருடங்களாக ஈட்டிய விடுப்பு தொகை வழங்காததால் சிரமப்படுகின்றனர்.
கும்பகோணம் கோட்டத்தில் திருச்சி, காரைக்குடி, கும்பகோணம், புதுக்கோட்டை, கரூர், நாகப்பட்டினம் ஆகிய மண்டலங்களில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். காரைக்குடி மண்டலத்துக்குட்பட்ட சிவகங்கை, மானாமதுரை,காரைக்குடி,தேவகோட்டை, திருப்புத்துார் உள்ளிட்ட பகுதிகளில் பணியாற்றும் பெரும்பாலான டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்களுக்கு கடந்த 10 வருடங்களாக ஈட்டிய விடுப்பிற்கான தொகை வழங்கப்படவில்லை.
அரசு பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் கூறியதாவது: ஒரு ஆண்டிற்கு 15 நாட்கள் ஈட்டிய விடுப்பாக வழங்கப்படுகிறது. விடுமுறை எடுக்காமல் அப்படியே ஈட்டிய விடுப்பாக நிர்வாகத்திடம் வழங்கினால் அதற்குரிய தொகையை நிர்வாகம் வழங்கி வந்தது. கடந்த 10 வருடங்களாக இந்தத் தொகையை வழங்காமல் நிர்வாகம் இழுத்தடிக்கிறது.
ஈட்டிய விடுப்பு தொகை குறைந்த பட்சம் ஒருவருக்கு ரூ.60 ஆயிரத்திலிருந்து ரூ.1 லட்சத்து 15 ஆயிரம் வரை வழங்கப்படாமல் உள்ளது. ஈட்டிய விடுப்பு தொகையை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்தனர்.
இதுகுறித்து காரைக்குடி மண்டல பொது மேலாளர் கந்தசாமி கூறியதாவது: டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்களுக்கு ஈட்டிய விடுப்பு தொகை வழங்குவதற்கான கோப்பு அனுப்பி வைக்கப்பட்டு படிப்படியாக வழங்கப்பட்டு வருகிறது. வழங்காதவர்களுக்கு விரைவில் வழங்கப்படும் என்றார்.