ADDED : அக் 30, 2025 04:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புவனம்,அக்.30-
திருப்புவனம் 15வது வார்டு கூட்டம் பேரூராட்சி இளநிலை உதவியாளர் நாகராஜ் தலைமையில் நடந்தது. கவுன்சிலர் அயோத்தி வரவேற்றார். ரயில்வே பீடர் ரோட்டில் சேதமடைந்த அங்கன்வாடி மையத்திற்கு புதிய கட்டடம் கட்ட 16 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது, தூய்மை பணியாளர்கள் குடியிருப்பு இடிந்து விழும் அபாயத்தில் இருப்பதால் அவர்களுக்கு புதிய குடியிருப்பு கட்டி தர வேண்டும் என கோரிக்கை விடுத்தார். கிராம மக்கள் சார்பில் வார்டுகளில் சில இடங்களில் கழிவு நீர் கால்வாய் அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

