/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புவனத்தில் வாட்டர் ஆப்பிள் விற்பனை
/
திருப்புவனத்தில் வாட்டர் ஆப்பிள் விற்பனை
ADDED : ஏப் 16, 2025 08:04 AM

திருப்புவனம் : திருப்புவனத்தில் வாட்டர் ஆப்பிள் விற்பனைக்கு வந்துள்ளது.
கோடை காலங்களில் பழங்களின் விற்பனை அதிகமாக இருக்கும். வெயிலின் தாக்கத்தை தணிக்க பலரும் பழங்கள், பழச்சாறுகளை விரும்பி சாப்பிடுவார்கள். கோடை காலத்தில் திராட்சை, மாம்பழம் ஆகியவற்றின் வரிசையில் வாட்டர் ஆப்பிள் விற்பனையும் தொடங்கியுள்ளது. தண்ணீர் சத்து உள்ள இப்பழம் வெயிலின் தாக்கத்தில் இருந்து உடலை பாதுகாக்க உதவுகிறது. ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருப்பதால் நீரிழிவு நோயாளிகள் விரும்பி வாங்குவார்கள். திருப்புவனத்தில் கிலோ 160 ரூபாய் என நேற்று விற்பனை செய்யப்பட்டது.
வியாபாரிகள் கூறுகையில்: மதுரை அலங்காநல்லுார் அருகே மூடுவார்பட்டி பகுதியில் விளைகிறது. அங்கிருந்து வாங்கி வந்து விற்பனை செய்கிறோம். மார்ச்சில் தொடங்கி ஆகஸ்ட் வரை சீசன் இருக்கும்.
இந்தாண்டு சீசன் சற்று தாமதமாக தொடங்கி உள்ளது. வரும் காலங்களில் விலை குறைய வாய்ப்புள்ளது. நீரிழிவு நோயாளிகள் விரும்பி வாங்குவார்கள். இனிப்பும் துவர்ப்பும் சுவை கொண்டது. பலரும் மிளகு, மிளகாய் பொடி தூளை சேர்த்து சாப்பிடுவார்கள், என்றார்.

