/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
நீதிபதி நடவடிக்கையால் கழிப்பறைக்கு தண்ணீர் வசதி
/
நீதிபதி நடவடிக்கையால் கழிப்பறைக்கு தண்ணீர் வசதி
ADDED : ஜூலை 05, 2025 11:19 PM
திருப்புத்துார்: திருப்புத்துாரில் நரிக்குறவர் குடியிருப்பில் கழிப்பறைக்கு தேவையான மின்சார இணைப்பு,தண்ணீர் வசதியை ஏற்படுத்திய நீதிபதிக்கு நரிக்குறவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
திருப்புத்துார் இந்திராநகர் பகுதியில் நீண்ட காலமாக நரிக்குறவர்கள் வசிக்கின்றனர். இங்கு ஜூன் 27ல் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் சார்பு நீதிபதி ராதிகா தலைமையில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது. அப்போது நரிக்குறவர்கள் தங்கள் குடியிருப்பில் நீண்ட காலமாக நிறைவேற்றாமல் உள்ள அடிப்படை வசதிகளை மேம்படுத்த கோரினர்.
அதில் மின்சார இணைப்பு, தண்ணீர் வசதியின்றி பயன்படுத்த முடியாமல் இருந்த கழிப்பறை குறித்தும் கேட்டிருந்தனர். மேலும், தெருவிளக்கு எரியாதது, குடிநீர் குழாய், வீடு வசதியும் கோரியிருந்தனர்.
இந்த மனுக்கள் மீது விசாரணை நடத்திய நீதிபதி பணிகளை நிறைவேற்ற சம்பத்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மறுநாளே கழிப்பறை பராமரிப்பு பணிகள் துவங்கின. பணிகள் குறித்து மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவினர் ஆய்வு செய்தனர்.
கழிப்பறைக்கு மின்சாரம், தண்ணீர் வசதி கிடைத்ததற்கும், கர்ப்பிணிகளுக்கும், குழந்தைகளுக்கு உணவு,முட்டை,சத்துமாவு பொருட்கள் வழங்கப்பட்டதற்கும் நன்றி தெரிவித்தனர்.