ADDED : மார் 09, 2024 08:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை : மானாமதுரை நகராட்சிக்குட்பட்ட வீடுகள், வணிக நிறுவனங்கள் உட்பட 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இணைப்புகள் மூலம் தினம்தோறும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
ராஜகம்பீரத்திலிருந்து வரும் குழாய்கள் சேதமடைந்ததை தொடர்ந்து தற்போது அங்கு மராமத்து பணி நடைபெற்று வருவதால் மானாமதுரை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஒரு நாள் விட்டு ஒருநாள் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

