/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
காளையார்கோவிலில் குடிநீர் குழாய் சேதம்
/
காளையார்கோவிலில் குடிநீர் குழாய் சேதம்
ADDED : ஜன 18, 2024 05:59 AM

காளையார்கோவில் : திருச்சி-ராமநாதபுரம் காவிரி கூட்டு குடிநீர் குழாய்கள் பலமிழந்து போனதால், காளையார்கோவிலில் குழாய் உடைந்து குடிநீர் விரயமாகிறது.
திருச்சி மாவட்டம்,முக்கொம்பு அருகே முத்தரசநல்லுார் காவிரி ஆற்றில் கிணறு அமைத்து குழாய்கள் மூலம் புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டம் வழியாக ராமநாதபுரத்திற்கு கொண்டு செல்லும் வகையில் கூட்டு குடிநீர் திட்டம் அமைத்தனர்.
தொடர்ந்து காவிரியில் இருந்து ராமநாதபுரத்திற்கு குழாய்கள் மூலம் குடிநீர் வினியோகம் செய்து வருகின்றனர். அக்கால கட்டத்தில் பொருத்திய குழாய்கள் வலுவிழந்துவிட்டது. இதனால், ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டு குடிநீர் விரயமாகி வருகிறது.
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலில் இருந்து பரமக்குடி செல்லும் ரோட்டில் உள்ள தொடக்க கூட்டுறவு வங்கிக்கு முன் காவிரி கூட்டு குடிநீர் குழாய் உடைந்து விட்டது. இந்த குழாய்களை செப்பனிடக்கோரி பலமுறை காளையார்கோவில் மக்கள் கோரியும் செப்பனிடவில்லை.
இதனால், காளையார்கோவில் அருகே கல்லல் ரோட்டில் உள்ள குடிநீர் மேல்நிலை தொட்டியில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் வீணாக பரமக்குடி ரோட்டில் தேங்கி கிடப்பதாக புகார் எழுந்துள்ளது.