/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பள்ளம் தோண்டும் இயந்திரம் மூலம் நீர் இறைப்பு
/
பள்ளம் தோண்டும் இயந்திரம் மூலம் நீர் இறைப்பு
ADDED : நவ 22, 2024 04:13 AM

மாற்றி யோசித்த தொழிலாளர்கள்
கீழச்சிவல்பட்டி: திருப்புத்துார் அருகே நல்லிப்பட்டியில் பள்ளம் தோண்ட பயன்படுத்தும் எக்ஸ்கவேட்டர் வாகனத்தை பயன்படுத்தி தண்ணீரை இறைக்கவும் தொழிலாளர்கள் பயன்படுத்துவதை பார்க்க முடிந்தது.
பாசனத்திற்கு நீர் இறைக்க பல முறைகளை விவசாயிகள் பயன்படுத்துகின்றனர்.
திட்டப்பணிகளிலும் நீர் இறைக்க மோட்டார் பம்ப், நீர் உறிஞ்சும் குழாய், வாளி மூலம் இறைத்தல் என்று பல வழிகள் உள்ளன. ஆனால் தற்போது தொழிலாளர்கள் மாற்று வழிகளை பயன்படுத்த துவங்கி விட்டனர்.
நல்லிப்பட்டியிலிருந்து சில்லாம்பட்டி செல்லும் வழியில் நடைபெறும் ஜல்ஜீவன் குடிநீர்த் திட்டப்பணியில் இதைப் பார்க்க முடிந்தது.
அங்கு 'கேட்வால்வ்'க்கு கட்டப்பட்டிருந்த தொட்டி சரிந்து விழுந்து விட்டது. அப்பள்ளத்தில் மழைநீர் தேங்கியிருந்தது. நீரை அகற்றி விரைவாக கட்டுமானப் பணிகளை துவக்க வேண்டியிருந்தது.
இதனால் நீரை அகற்ற பள்ளம் தோண்ட பயன்படுத்தப்படும் எஸ்கவேட்டர் வாகனம் மூலமே தண்ணீரை அகற்றத் துவங்கினர்.
சமயோசிதமான முடிவால் நேரத்தை வீணடிக்காமல் எளிதாக தண்ணீரை அவர்கள் வெளியேற்ற முடிந்தது. இதனால் திட்டப்பணி தாமதமாகாமல் துவங்கியது.