/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திதி பொட்டல் வரை தேங்கிய தண்ணீர்; மஹாளய அமாவாசை: பக்தர்கள் அச்சம்
/
திதி பொட்டல் வரை தேங்கிய தண்ணீர்; மஹாளய அமாவாசை: பக்தர்கள் அச்சம்
திதி பொட்டல் வரை தேங்கிய தண்ணீர்; மஹாளய அமாவாசை: பக்தர்கள் அச்சம்
திதி பொட்டல் வரை தேங்கிய தண்ணீர்; மஹாளய அமாவாசை: பக்தர்கள் அச்சம்
ADDED : செப் 10, 2025 07:55 AM

திருப்புவனம்; வைகை ஆற்றினுள் திதி பொட்டல் இடம் வரை தண்ணீர் தேங்கியதால் மஹாளய அமாவாசைக்கு பக்தர்கள் திதி, தர்ப்பணம் கொடுக்க முடியுமா என அச்சத்தில் உள்ளனர்.
தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் மறைந்த முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் வழங்க திருப்புவனம் வந்து செல்கின்றனர். காசி செல்ல முடியாதவர்கள் மறைந்தவர்களின் அஸ்தியை திருப்புவனம் வைகை ஆற்றில் கரைத்து செல்வது வழக்கம்.
தை, ஆடி, புரட்டாசி அமாவாசை தினங்களில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திதி, தர்ப்பணம் வழங்க திருப்புவனம் வருவார்கள், இந்தாண்டு புரட்டாசி அமாவாசை செப். 21ம் தேதி ஞாயிற்று கிழமை வருகிறது. வைகை ஆற்றில் கானுார் மற்றும் பழையனுார் கண்மாய் பாசன தேவைக்காக மிக நீளமான தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. தடுப்பணையில் பணிகள் இன்னமும் முடியாத நிலையில் மழை காரணமாகவும் வைகை ஆற்றில் நீர் வரத்து காரணமாகவும் வைகை ஆற்றுப்பாலம் வரை தண்ணீர் தேங்கியுள்ளது.
வைகை ஆற்றை ஒட்டி ஒரே பக்கமாக பல ஆண்டுகளாக தண்ணீர் சென்றதால் பள்ளமாக உள்ளது. தடுப்பணை காரணமாக பள்ளம் முழுவதும் நீர் நிரம்பி காட்சியளிக்கிறது.
செப். 21ம் தேதி புரட்டாசி மஹாளய அமாவாசை என்பதால் வைகை ஆற்றினுள் வைத்து தான் திதி, தர்ப்பணம் நடைபெறும். பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வைகை ஆற்றில் இறங்கி சென்று முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் வழங்குவார்கள், பள்ளங்களில் தண்ணீர் நிரம்பியிருப்பதால் முதியோர்கள், மாற்றுத் திறனாளிகள், பெண்கள் சிரமம் அடைய வாய்ப்புண்டு.
பொதுப்பணித்துறை அதிகாரிகள் பழையனுார் கண்மாய் ஷட்டரை திறந்தால் ஓரளவிற்கு நீர்மட்டம் குறைய வாய்ப்புண்டு அல்லது கானுார் ஷட்டர் பகுதிக்கு தண்ணீரை திருப்பிவிட்டாலும் நீர்மட்டம் குறைந்து விடும், மஹாளய அமாவாசைக்கு பத்து நாட்கள் உள்ள நிலையில் பக்தர்களின் நலன் கருதி பொதுப்பணித்துறை நீர் மட்டத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.